கருப்பை பலப்பட , குழந்தை பாக்கியம் உண்டாக

அத்தி 
www.youtube.com 
தாவர பெயர் ; FICUS GLOMERATA
தாவர குடும்பம் ; MORACEAE 
பயன்கள் ;
                       இதன் பூகாய்,  பழம்பிஞ்சு , பால்மரப்பட்டை , என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது . உலர் அத்தி பழத்தில் தேவையான நார் சத்து உள்ளது . தினம் 2-3 அத்தி பழம் சாப்பிட்டு வந்தால் ஒரு மனிதனுக்கு தேவையான நார் சத்து கிடைக்கிறதுஇது உட்கொள்ளும் போது  மலசிக்கல்  வராமல் தடுக்கிறதுஒரு அத்தி பழத்தில்  3% கால்சியம் , 2% இரும்பு சத்து , இருக்கிறது இது ஒரு மனிதனின் தினசரி தேவையான கால்சியத்தின் அளவாகும்கால்சியம்  நம் எலும்புகள் நல்ல உறுதியுடன் மற்றும் வலிமையுடன் இருக்க தேவை . 

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது . ஹீமோகுளோபினை உடல் முழுவதும் கொண்டு செல்ல இது தேவைபடுகிறது. இது இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். வெறும் அத்தி பழம் ( சர்க்கரை பாகு எனும் தேன் சேர்க்காத ) நல்ல  துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இதை சர்க்கரை நோயாளிகளும் சாபிடலாம். இதில் நார் சத்து அதிகம்  உள்ளத்தால் அவர்களுக்கும் நல்லது. அத்தி பழம் கர்பபபை பலபடுத்தும். இதனால்  கருத்தரிப்பு  நடக்கும் . அத்தி பழம் ஆண், பெண் , இருவருக்கும் நல்லது மற்றும்  பால் உணர்வுத் தூண்டியாக  உள்ளது. இதில்  மாங்கனிசு,  ஜிங்க் உள்ளது.

அத்தி  இதய நோய் வராமல் பாதுகாக்கும். பொதுவாக நமது உடலில்  பொட்டாசியத்தின்  அளவு குறைந்தால்  ரத்த அழுத்தம்  உண்டாகும் சோடியம் அதிகமானால் தான்  பொட்டாசியம் குறையும் எனவே நமது உணவில் உப்பின் அளவு குறைத்தால் இந்த பிரச்சனை வராது .அத்தி பழம்  டிரை-க்ளிசரைடு  குறைப்பதால் இருதய சார்ந்த நோய் சரியாகிறது. அத்தி பழத்தில்  ஆன்டி-ஆக்ஸிடென்ட்  நிறைய இருப்பதால்  ப்ரி-ராடிக்கலை தடுத்து  ரத்த நாளங்களின்  பாதிப்பு  தடுக்கப்படுகிறது. ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தி  கரோனரி இருதய நோய்  தாக்கமும்  சீராகும்.

முருங்கை
தாவர பெயர் : Moringa Oleifera
தாவர குடும்பம் ; Moringaceal
பயன் தரும் பாகங்கள் : இலை, காய், பூ, பட்டை, பிசின்,

இலை பயன் : 
www.srilankancuisine.com 
                  இதன் இலையில் வைட்டமின் A, B, Cகால்சியம்இரும்பு  சத்து நிறைத்து உள்ளது . இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால் இதில் உள்ள அதிகபடியான கால்சியம் , இரும்பு  சத்தின், காரணமாக ரத்தசோகை நோய் முற்றிலும் குணமாகும் . தொடர்ந்து 15 நாள் சாப்பிட உடலில் உள்ள இரத்தத்தின் அளவு கூடுவதை பார்க்கலாம் முருங்கை இலை தினமும் கிடைக்காதவர்கள் முருங்கை இலையை நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்ததும் போடி செய்து வைத்து கொண்டு தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர மேலே சோன்ன பலன் கிடைக்கும். ஒரு கோப்பை முருங்கைக்கீரை தீ நீரில் ; 500 கிராம் வெண்ணையில் மற்றும் 8 டம்ளர் பால், மற்றும் 9 முட்டையில் உள்ள வைட்டமின் A, உள்ளது. கண் பார்வை நரம்புகள் பலம் பெரும்  . மலசிக்கல் சரியாகும் , வயற்று புண் குணமாகும், அஜீரண கோளாறுகள் சரியாகும். உடல் சூட்டை குறைக்கும். பித்தத்தை குறைக்கும். இளநரை போக்கும். உடலை  மினு மினுப்பாகும் முருங்கை  இலை சாற்றில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் உள்ள பருக்களின் மீது தடவ முகப்பரு சரியாகி தழும்புகள் மறைந்து மறுபடியும் முகப்பருக்கள் வராமல் இருக்கும். பாலை நன்கு காயவைத்து அதில்  முருங்கை இலை சாறு சிறிது சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அதில் ஏலக்காய் சேர்த்து குழந்தைகளுக்கு கோடுக்க நெஞ்சு சளி சரியாகி உடல் தேறும் .  



முருங்கக்காய் பயன் : 
www.flicker.com 
                          இது ஒரு நார் சத்து மிக்க காய் அத்துடன் இதன் ருசியும் நன்றாக இருக்கும். முருங்கை காய் பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. இதன் மருத்துவ குணம் ஆண், பெண் என இருவருக்கும் பொதுவானது . அத்துடன் முந்தைய காலத்தில்  முருங்கை மரம் இல்லாத வீட்டிற்கு பெண் தர மாட்டார்கள் வீட்டில் முருங்கை மரம் இருந்தால் வீட்டுடன் ஒரு மருத்துவர் இருப்பது போல் என்பார்கள். முருங்கை காய் ஒரு தாது விருத்தி. இது தாதுவை பெருக செய்கிறது. ஆண் மலடு நீக்கியாக உள்ளது. தூக்கத்தில் விந்து வெளியேறுதல், சிறுநீரில் விந்து வெளியேறுதல், விந்து நஷ்டம், விந்து நீர்த்து போதல் போன்ற பிரச்னையை சரிசெய்கிறது. 
மருத்துவ முறை : முருங்கை பிஞ்சை சிறியதாக நறுக்கி வாய்யகன்ற பாத்திரத்தில் நெய் 2 ஸ்பூன் விட்டு சூடாக்கி அதில் வெட்டி வைத்துள்ள முருங்கை பிஞ்சை போட்டு வதக்கி நீர் விட்டு நன்கு கொதிக்கவைத்து அதில் மிளகு சேர்த்து காய்ச்சி வடிகட்டி சுவைக்கு உப்பு போட்டு தினமும் காலையில் பருக  விந்து  வெளியேறுதல், விந்து நஷ்டம், விந்து நீர்த்து போதல் போன்ற குறைகள் நீங்கி விந்து கெட்டிப்படும் விந்தணு குறைபாடு நீங்கும் . நரம்பு தளர்ச்சி நோய் சரியாகும். காம உணர்வை துண்டியாக உள்ளது. முருங்கக்காய் ஜீரண மண்டலத்தை நன்கு இயங்க செய்கிறது .

முருங்கப்பட்டை மருத்துவ பயன் : 
www.buynattumarunthuonline.com
                                                                      முருங்கப்படையை இடித்து சாறு எடுத்தும் பயன்படுத்தலாம் அல்லது முருங்கப்படையை நீரில் இட்டு காய்ச்சியும் பயன்படுத்தலாம் முருங்கப்பட்டை ஒரு சளி நீக்கியாக செயல்படுகிறது. மற்றும் தோல் சம்பந்தமான பிரச்னையை சரிசெய்கிறது . ஆஸ்துமாவுக்கு நல்ல மருந்தாக இருக்கிறது. பிரசவ நேரத்தில் ஏற்படும் இடுப்புவலிக்கு இதை கஷாயம் வைத்து தருவார்கள். வயற்றில் இருக்கும் தேவை இல்லாத புழுவை அழிக்கிறது.

மருத்துவ முறை: (ஆஸ்துமா சளி சரியாக)   
                                                                                 வாய்யகன்ற பாத்திரத்தில் முருங்கப்பட்டையை போட்டு நீர் வீட்டு காய்ச்சி நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து சுவைக்கு தேன் கலந்து பருக சளி கரைத்து கொண்டு வெளிவரும். சுவாச பாதையில் உள்ள வீக்கத்தை  வற்ற வைக்கிறது. சுவாசத்தை சீர்படுத்துகிறது. மூச்சுமுட்டலை, இறைப்பை குணமாக்குகிறது. 

 தோல் நோய்க்கு மருந்து :                                                                  முருங்கபட்டையை நல்லேன்னையுடன் காய்ச்சி அதில் குப்பைமேனி இலைச்சாறு சேர்த்து நன்கு தைல பதத்திற்கு காய்ச்சி  வடிகட்டி வெளி பூச்சாக தடவ சொரியாசிஸ், நீர்வடிகின்ற தோல் நோய், அரிப்பு , தடிப்பு,போன்ற பிரச்சனைகள் சரிசெயும்.

முருங்கை பிசின் :
www.youreverydaycookradha.blogsport.com
 பாதாம் பிசின் போலவே முருங்கை பிசினும் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடென்ட் என்பதால் உடலுக்கு நல்ல புத்துணர்வை தரும். அரை டம்ளர் நீரில் 2 ஸ்பூன் முருங்கை பிசின்னை போட்டு ஊறவைத்து சாப்பிடலாம்

முருங்கை பூ : 
www.flickr.com 

                       இன்று கருப்பை பிரச்சன்னை, கருமுட்டை குறைபாடு, குழந்தையின்மை, மலட்டுத்தன்மை, என்று பல பிரச்சனைக்கு மருத்துவரை பார்த்து பல லட்சம் செலவு செய்து பலன் கிடைக்காமல் பலரும் தவிக்கின்றனர். அவர்கள் முருங்கை பூவின் பலனை பயன்படுத்தினால் குழந்தைபேரு என்னும் நல்ல செய்தி அவர்களுக்கு கிடைக்கும். முருங்கை பூவை எடுத்து நன்கு கொதிக்கும் பாலில் போட்டு நன்கு வேகவைத்து தேன் கலந்து தொடர்து  பருக சீக்கிரம் நல்ல செய்தி கிடைக்கும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு கை பிடி முருங்கைபூ போதும்.


திராட்சை :  
www.marlon.co
          திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும்  நமைகள் :

                                                                 மலசிக்கல் பிரச்சனை சரிசெய்கிறது . இதில் உள்ள ஆர்கானிக் ஆசிட் செலுலோஸ் மலசிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கிறது . ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்தால் மலசிக்கல் சரி ஆகும் . காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் தொடர்ந்து பதினைந்து நாள் குடித்து வர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும் . திரட்சியிலுள்ள ஃபிளாவனாய்டுகளின் (Flavonoids) ஒன்றான க்யூயர்சிடின்  (quercetin) இருப்பதால் உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுககின்றது . திராட்சையில் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் (glycemic index) உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டு படுவதுடன் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் . திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சியை தடுக்கும் பொருள் இருப்பதால் உடலில் இருக்கும் நாள்பட்ட காயங்களை சரி செய்து புற்றுநோய் செல்களை அழிக்கின்றது மற்றும் இதில் உள்ள பைடோ நியுற்றியன்ட்டுகளான  அந்தொசியனின்கள் மற்றும் ப்ரோ அந்தொசியனின்கள் புற்றுநோய் செல்கள் மேலும் பெரிதாவதை தடுக்கிறது
                                 
நன்கு கனிந்த திராட்சையால் செய்யப்பட்ட ஜூஸை குடிப்பதால் ஒற்றை தலைவலி வராமல் தடுக்கிறது . மேலும் இது நாள் பட்ட வலியாக இருந்தால் தினமும் காலையில் தண்ணீர் சேர்க்காத திராட்சை ஜூஸை குடிக்க வலி குணமாகும் ஆகும் . மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் பொருள் திராட்சையில் நிறைந்திருக்கிறது மற்றும் இதில் நரம்பியல் சிதைவு வளர்ச்சி நோய் ஏற்படுவதை தடுக்கும் குணம் உள்ளத்து திராட்சையில் பன்னீர் திராட்சை பெண்களுக்கு மிகவும் நல்லது விதை இல்ல திராட்சையை உபயோகிப்பதை குறைத்து கொள்வது நல்லது . திராட்சை மட்டும் அல்ல எந்த பழத்திலும் விதையுடன் இருப்பது நல்லது விதை இல்லாத பழங்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கு மலட்டு தன்மை வர வாய்ப்பு அதிகம் உள்ளது .

எடை குறைய :
                            ரெஸ்வெரடால் (resveratrol) திராட்சையில் இருப்பதால் எடை குறைய செய்கிறது . மேலும் ஆராய்ட்சிகளில் நமது உடலில் கொழுப்புகள் தங்குவதை படிப்படியாக குறைப்பதாகவும் கண்டறிய பட்டுள்ளது . எனவே உடல் எடை குறைய நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த செய்தி . திராட்சை தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் நிறைந்துள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் சருமத்தை பொலிவுடனும் சுருக்கங்களின்றியும் வைத்து கொள்ளும் .இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால் முதுமை தோற்றம் மாறி இளமை தோற்றம் வரும் . திராட்சை விதை கொழுப்பை கரைத்து உடல் இளைக்க உதவியாக இருக்கிறது .


கொடி பசலை 


www.a1tamilnadu.com

தாவர பெயர் : Basella alba 
கொழுந்தாக உள்ள கோடி சுருளை பச்சையாக சாப்பிட்டால் நிறைய நன்மைகள் தரும் நீரிழிவு , ரத்த குறைவு , கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவை குணமாக கொடி பசலை மிகவும் உதவியாக உள்ளது . இதன் சாற்றுக்கு சிறுநீரில் உள்ள கற்களை கரைத்து வெளியேற்றும் சக்தி உள்ளது  . சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் சரி செய்கிறது . இதன் சாற்றால் வாய் கொப்பளித்தால் தொண்டை புண் குணமாகும் . இதன் இலைகளை ஒன்று முதல் பத்து வரை எடுத்து கசாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் , கல்லடைப்பு , சுவாச பைகளிலும் உள்ள வீக்கங்கள் வற்றும் . சுவாசிப்பதில் சிரமம் வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை சரியாகும் . இந்த கீரை சாப்பிடும் பொழுது தாது கெட்டி படும் .

மூளைக்கு சக்தி கொடுக்கும் . இது ஒரு துவர்ப்பு மருந்து . இது சிறு நீரை பெருக்குகின்றது . இளம் பெண்கள் உன்ன வேண்டிய மிக முக்கியமான கீரை . இதில்  இரும்பு சத்து ஏராளமாக உள்ளது . இது சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகிறது . தாய் பாலிற்கு இணையான சக்தி இந்த கீரைக்கு உண்டு . வீட்டில் வளர்க்க சுலபமான கோடி வகை இது . இதற்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை பூச்சிகள் தொல்லை இல்லாமல் இருக்க நீரில் வேப்பம்புன்னக்கு போட்டு ஊறவைத்து தெளித்தால் போதும் இதன் இலையில் உள்ள கொழகொழப்பான தன்மையால் தோல் பிரச்சனைக்கு மருந்தாகிறது . வெளி பூச்சாக உபயோகிக்க வெயில் காலங்களில் ஏற்படும் தோல் எரிச்சல் தோல் வரட்ச்சி போன்றவை சரியாகி விடும் .  மிளகு மற்றும் கொடிபசலை சேர்த்து அரைத்து மிளகைவிட சற்று பெரியதாக உருட்டி காயவைத்து எடுத்து வைத்து கொள்ள குழந்தைகளுக்கு வரும் விஷ காய்ச்சல்கு தினம் குடுத்து வர காய்ச்சல் காணாமல் போகும் . பசலை கீரை மைய்ய அரைத்து சுக்கு போடி சேர்த்து நெற்றியில் பற்று போட தலை வலி குணமாகும் .

இதில் A ,B ,C, K, வைட்டமின்கள் உள்ளது . இரும்பு , புரதம் , சுண்ணாம்பு ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது . கண்பார்வைக்கு மிகவும் நல்லது . பித்தத்தை குறைக்கும் . இதில் உடல் வரட்சி நோய் பெரிபெரி எனும் வீக்க நோய்க்கு எதிரான சத்துக்கள் உள்ளது . மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் குறைந்தது ஒரு வாரம் இந்த கொடிபசலையை வறுத்து அதன் தன்மையை அழித்துவிடாமல் லேசாக பருப்புடன் வேகவைத்து அவியலாக செய்து சாப்பிட கரு தாங்கும் குழந்தை இல்லாதவர்கள் இதை கட்டாயம் செய்யுங்கள் நிச்சியம் குழைந்தை பேரு கிடைக்கும் .

No comments:

Post a Comment